கொரியரில் வந்த 'மர்ம' பார்சல்...! அப்படி உள்ள என்ன தான் இருக்கு...? 'சரி ஓப்பன் பண்வோம்னு பார்சலை திறந்தா...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு கொரியரில் மர்ம பார்சல் வந்ததது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
![thanjavur farmer parcel of bomb materials in courier thanjavur farmer parcel of bomb materials in courier](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/thanjavur-farmer-parcel-of-bomb-materials-in-courier.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை அடுத்த கண்ணந்தகுடியை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் அறிவழகன் (27). இன்ஜினியரிங் படித்து முடித்த இவர், தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அறிவழகனுக்கு திருச்சியிலிருந்து கொரியர் வந்துள்ளதாக ஒரத்தநாட்டில் உள்ள கொரியர் நிறுவனத்தில் இருந்து கூறியிருக்கிறார்கள்.
இதனையடுத்து ஒரத்தநாடுக்கு சென்று கொரியர் பார்சலை அறிவழகன் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்சலை அறிவழகன் பிரித்து பார்த்தபோது பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இது பற்றி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று வெடிகுண்டு மூலப்பொருட்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘திருச்சி தென்னூர் ஹைரோடு, 10.சி. வெள்ளாளர் தெரு, சி.கார்திரப்பன் என்ற முகவரியில் இருந்து பார்சல் வந்துள்ளது. இந்த முகவரி போலியானது என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பார்சலில் வெடிகுண்டு தயாரிக்கும் கனெக்டிங் டெட்டனேட்டர், ஜெலட்டின் இருந்துள்ளது. இது அபாயகரமான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களாகும். இதுபற்றி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)