பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள்.. நீண்ட வரிசையில் காத்திருந்த வாங்கும் ‘குடிமக்கள்’..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 07, 2020 01:48 PM

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tasmac shops open from today, heavy crowd in front of shops

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழத்தில் கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்றுமுதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடங்கியது. ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு மதுபாட்டில்கள்தான் வழங்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி செல்கின்றனர். பல கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேலும் மது வாங்க வருபவர்கள் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மதுக்கடைகளுக்கு முன்னர் சிலர் குடை கடைகளும் போட ஆரம்பித்தனர். கடலூர், புதுச்சேரியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் மது வாங்க குவிந்தனர்.