BREAKING: 'தமிழகத்தில் இ-பாஸ் ரத்து...' பேருந்துகள் ஓடுமா...? தளர்வுகள் என்ன...? - கூடுதல் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 30, 2020 06:40 PM

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் இ-பாஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu the curfew has been extended till September 30

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் முதல் முழு ஊரடங்கும், அதன் பின் சில தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறையும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசு நேற்று வெளியிட்ட ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து,  தமிழக அரசு வெளியிட்டுள்ள  அறிக்கையில் இ-பாஸ் முழுவதுமாக ரத்து செய்துள்ளது.

மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கூடுதலாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளித்துள்ளது.

அரசு நிபந்தனைகளுடன் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கடைகளையும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

கூடுதலாக மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியும், சென்னையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள்,  திரையரங்குகள் செயல்பட தடை நீடிப்பு.

விமானம் மூலம் பயணம் செய்யும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் மற்றும் இரயில் மூலம் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிற மாநில  பயணிககளை தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

மேலும் மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செய்யப்படும் எனவும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் 15.09.2020 வரை செயல்பட அனுமதியில்லை.  செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முடிவெடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வணிக வளாகங்கள்  இனி 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

குறிப்பாக ஞாயிறுகிழமை பின்பற்றப்பட்ட முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ சேவை வரும் 7ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலைவாசல் ஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்வதைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags : #CURFEW #TN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu the curfew has been extended till September 30 | Tamil Nadu News.