'யாராவது டியூசன் எடுக்குற விஷயம் தெரிய வந்துச்சுன்னா...' 'அவங்களோட விவரங்கள் எடுக்க முடிவு...' பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 20, 2020 08:00 PM

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு டியூசன் எடுப்போரை மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது பள்ளி கல்வித்துறை.

School education department warns children to take tuition

தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் விமான சேவை இரயில் சேவைகளையும் குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் மாணவர்களுக்கு பரவாமல் தடுக்க மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

அதை தொடர்ந்து தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் வீட்டிலிருந்து பணிகளை செய்ய அறிவுறுத்தி உள்ளது. மேலும் வரும் 22 ஆம் தேதி இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவினை பின்பற்றுமாறும் நேற்று பிரதமர் கேட்டுக்கொண்டது குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு  வீடு, மையங்களில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது போல வீடுகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

Tags : #TUTION