"EXPIRY தேதி பார்த்து வாங்குங்க".. மருந்துகள் குறித்து சத்யராஜ் மகள் பேசிய விழிப்புணர்வு வீடியோ..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சத்யராஜ். தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்த சத்யராஜ், தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
![Sathyaraj Daughter Divya awareness on expiry Medicines Sathyaraj Daughter Divya awareness on expiry Medicines](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/sathyaraj-daughter-divya-awareness-on-expiry-medicines.jpeg)
தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கிறார். இவரது மகன் சத்யராஜ் தமிழில் இளம் ஹீரோவாக விளங்கி வருகிறார். இந்நிலையில் சத்யராஜின் மகள் மருந்துகள் பயன்படுத்துவது, விற்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம் நான் திவ்யா சத்யராஜ்.
ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக இந்த வீடியோ பதிவு. என்னுடைய பேஷன்ட் ஒருவர் வாங்கிய நான்கு மருந்துகளில் மூன்று மருந்து காலாவதி ஆனவை. எக்ஸ்பைரி தேதி முடிந்து போன மருந்துகளை எடுத்துக் கொள்வதால் பல உடல் உபாதைகள் வரலாம். இது முதல் முறையல்ல, பலமுறை நடந்திருக்கிறது.
மக்களாகிய நீங்கள் வாங்கும் எல்லா மருந்துகளுக்கும், மளிகை பொருட்களுக்கும் எக்ஸ்பைரி தேதி பார்த்து, பரிசோதித்து வாங்குங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு வாங்கும் மருந்துகள், சிரஞ்சி, சிரப், க்ரீம்ஸ், ஷாம்பூ , பால் பவுடர் இப்படி எது வாங்கினாலும் எக்ஸ்பைரி தேதி பார்த்து வாங்குங்கள். எந்த துறையிலும் தவறு நடக்க கூடாது . ஆனால் மருத்துவ துறையில் தவறு நடந்தால், அது உயிருக்குப் உடலுக்கும் ஆபத்தாகிவிடும்." என குறிப்பிட்டுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)