"அன்னைக்கு மிஸ் தமிழ்நாடு, இப்போ மிஸ் இந்தியா போட்டியில".. தடைகள் தாண்டி தடம் பதித்த தமிழக கட்டிட தொழிலாளி மகள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
Also Read | 2000 வருசத்துக்கு முன்னாடி... இயேசு கிறிஸ்து அணிஞ்ச அங்கி?.. அவரை சிலுவைல அறைஞ்ச ஆணியும் அங்க தான் இருக்கா?
இவரது மகளான ரக்சயா, தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும் குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்ததையும் தாண்டி, தனது முழு முயற்சியில் பகுதி நேர வேலை என ரக்சயா தனி ஆளாக கடின உழைப்பையும் போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்ட ரக்சயா, அதில் வெற்றி பெற்றதால் அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கவுரவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வான ரக்சயா, அதன் பின்னர் மாநில அளவிலான போட்டியிலும் தேர்வாகி இருந்தார். இதன் விளைவாக, சமீபத்தில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றும் சாதனை புரிந்திருந்தார் ரக்சயா.
வறுமையான குடும்ப பின்புலம் இருந்த பிறகும், தன் முன்பிருந்த தடைகளை தாண்டி சாதித்தே ஆக வேண்டுமென முயற்சிகளை மேற்கொண்டு வந்த இளம்பெண் ரக்சயாவுக்கு உரிய கிரீடமும் கிடைத்திருந்தது. மேலும், அடுத்தடுத்து வெற்றிகள் பெற்று மிஸ் இந்தியா பட்டத்தையும் வெல்வேன் என்றும் ரக்சயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியிலும் ரக்சயா கலந்து கொண்டிருந்தார். ஜெய்ப்பூரில் வைத்து கடந்த சில தினங்கள் முன்பாக மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில், மிஸ் இந்திய போட்டியில் இரண்டாம் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரக்சயா.
குடும்ப சூழ்நிலை, வறுமை உள்ளிட்ட பல தடைகள் இருந்த போதும் அவற்றை எல்லாம் கடந்து தனது இலக்கை நோக்கி பயணித்த தமிழக இளம்பெண் ரக்சயா, தற்போது இந்திய அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து காட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரக்சயாவின் சாதனையை தற்போது பலரும் பாராட்டி வரும் சூழலில், இன்னும் அதிக உயரத்திற்கு அவர் செல்வார் என்றும் வாழ்த்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "இனி ஹெலிகாப்டர் ரோட்டுலயும் ஓடும் போல".. தச்சரின் அற்புதமான கண்டுபிடிப்பு.. வியந்து பார்க்கும் மக்கள்!!