NAYANTHARA : வீட்ல வேலை செய்ற பெண்ணுக்கு கஷ்டம்.. ரூ.4 லட்சம் கொடுத்து உதவிய நயன்.. தங்க வளையலே கொடுத்த அவரது அம்மா.. ‘மருமகள் நயன்தாரா’ குறித்து விக்னேஷ் சிவனின் தாயார் நெகிழ்ச்சி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.
நானும் ரவுடிதான் படத்தில் தொடங்கிய இவர்களின் நட்புறவு காதலாக மாற, இயக்குநர் விக்னேஷ் சிவனை பின்னர் நயன்தாரா திருமணம் செய்துகொண்டார். திரையுலகினர் மற்றும் உறவினர்கள் சூழ இவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அத்துடன், அண்மையில் இவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறைமையில் இரட்டைக் குழந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ பெற்றோர்களாகினர்.
திருமணத்திற்கு பின்னரும் நயன்தாரா நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த காட் ஃபாதர் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனின் இயக்கத்திலான கோல்டு படத்தில் பிரிதிவிராஜூடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது மருமகள் நயன்தாரா குறித்தும் அவர் செய்த நெகிழ வைக்கும் விசயங்கள் குறித்தும், இயக்குநர் விக்னேஷ் சிவனின் அம்மாவும், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருமான மீனாகுமாரி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில், “என் மருமக நயன்தாராவின் வீட்டில் சமையல் வேலை, அயர்னிங் செய்யும் வேலை, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை உதவிகள் செய்ய மொத்தம் 8 பேர் இருக்காங்க.. 4 லேடீஸ்.. 4 ஜெண்ட்ஸ்.. அவங்க மொத மொதல்ல வேலைக்கு சேர்ந்து கடுமையான வேலை செஞ்ச ஒரு அம்மா இருந்தாங்க,. அவங்க சோகமா இருக்கவும், அவங்க கிட்ட என்ன நடந்ததுனு நயன்தாரா கேக்க, அவங்க 4 லட்சம் ரூபா கடன் இருக்குதுமா என சொல்லிருக்காங்க.
நான் பாத்துகிட்டே இருந்தேன்.. உடனே நயன்தாரா அவங்க கிட்ட 4 லட்சம் ரூபா பணத்த கொடுத்து, மொதல்ல போய் கடன அடைச்சுட்டு வாங்கம்மானு சொன்னாங்க.. அதேமாதிரி நயன்தாராவோட அம்மா கேரளாவில் இருந்து ஒருநாள் வீட்டிற்கு வந்தாங்க.. அவங்க வரும்போது கூட யாருக்கும் தெரியல. வந்ததும் அந்த வேலைசெய்யும் அம்மாவுக்கு இரண்டு தங்க வளையலே கையிலயே போட்டுவிட்டாங்க.. ” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் பேசியவர், “நானும், எங்கிட்ட பணி செய்த பொண்ணுக்கு 5 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணி வெச்சேன். அவங்க கணவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன்.,. அவங்க குடும்பத்துக்கு நிறைய உதவி செஞ்சிருக்கேன்.. அதேமாரி வீட்டில் பணிபுரிந்த சிலர், செஞ்ச தவறுகளையும் கண்டிச்சு, ஆனா அவங்க மேல காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காம, அறிவுரை மட்டும் சொல்லி சரி பண்ணிருக்கோம்.. நம்ம வீட்டுல பணிபுரியும் பணியாளர்களை நம்ம சகோதர சகோதரிகளாக நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு Happy Employment Service and Maid Agency -யின் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில்தான் விக்னேஷ் சிவனின் தாயார் பேசினார். சென்னை, வளசரவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர வீட்டு நர்ஸிங் சேவை பணியாளர்கள், வேலையாட்கள், சமையலர்கள், குழந்தையை கவனித்துக்கொள்பவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்பவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
ரெசிடென்ஷியல், அபார்ட்மெண்ட் , கமர்ஷியல் பணிகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கும், அல்ஸைமர் நோயாளிகள் உட்பட நோய் பாதிக்கப்பட்டவருக்கு சர்ஜரி நேரத்திலும், ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் உட்பட பலநிலை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கும், செல்லப்பிராணிகளை பராமரித்துக் கொள்வதற்கும் பணியாட்களை பணிக்கு அமர்த்தித் தருவது என 24 மணி நேர சேவையை இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி: www.happymaids.in