நாளைக்கு காலையில் '9 மணி' முதல் சென்னையில் 'இந்த இடத்துல' ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும்...! - தமிழக அரசு அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் அரசின் மேற்பார்வையின் படி டோக்கன் முறையில் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஏற்கனவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளும் இருப்பதால் அங்கு மருந்து வாங்கும் நபர்களும் வருவதால் கூட்டம் அதிகம் காணப்பட்டுகிறது.
இந்நிலையில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரு விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், நேரு விளையாட்டு அரங்கில் நாளை (மே 15) முதல் ரெம்டெசிவிர் மருந்து காலை 9 மணிக்குத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும், அங்கு கூட்டத்தைத் தவிர்க்க நேரு விளையாட்டரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
