'12-ம் வகுப்பு செய்முறை தேர்வு'... 'பொதுத்தேர்வு அட்டவணை எப்போது'?... அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு காலம் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலும் மே மாதம் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் உள்ளது.
இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
