'28 நாட்கள் வெளிய வரக்கூடாதுன்னு சொல்லிருக்கோம்...' 'ஸ்டிக்கர் கிழிச்சதா எங்களுக்கு தகவல் வந்துச்சு...' அழியாத 'மை' கொண்டு கையில் சீல் வைத்த அதிகாரிகள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 29, 2020 08:41 AM

கடையநல்லூர் பகுதியில் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை கிழித்ததால் அவர்களின் கைகளில் அழியாத மையால் முத்திரை குத்தியுள்ளனர்.

Officers sealed by an isolated dilapidated center

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சத்தால், தற்போது அனைத்து நாடுகளும் அதன் பரவலை கட்டுப்படுத்த லாக் டோவ்ன் அறிவித்து தங்கள் நாட்டின் எல்லைகளையும், இரயில் விமான சேவைகளை முடக்கியுள்ளனர்.

இதனால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் இந்திய மக்கள் தற்போது இந்தியாவிற்கு படையெடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் தென்காசி, கடையநல்லூர் பகுதியில் சவூதி, துபாய் ஓமன் சிங்கப்பூர் மலேசியா போன்ற பிற நாடுகளில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

சோதனையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்குமாறு ஆலோசனைகளை வழங்கி அவர்களின் வீடுகளில் சுகாதார துறை சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

வீடுகளில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம், வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தற்போது அரசால் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை சில வீடுகளில் கிழித்து வருகின்றனர் என அக்கம் பக்கத்தினர் நகராட்சிக்கு புகார் அளித்துள்ளனர்.

புகாரை அடுத்து நேற்று துணை ஆட்சியர் குணசேகரன், தாசில்தார் அழகப்பராஜா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி தலைமையில் கடையநல்லூர் பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்த செய்தியில், இப்பகுதியில் 348 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 252 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர் எனவும், அவர்களை 28 நாட்கள் தனிமையில் இருக்க கட்டுப்பாடு விதித்துள்ளோம். மேலும் தற்போது அவர்களின் இடது கையில் அழியாத மையால் முத்திரை இடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி. இதையும் மீறி அவர்கள் வெளியே வந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : #ISOLATION