காலேஜ் முடிஞ்சி ஹாஸ்டல் போனபோது இடையில் நடந்த விபரீதம்.. கன்னியாஸ்திரிக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாஸ்திரி ஒருவர் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகள் கன்னியாஸ்திரி பயிற்சி முடித்துள்ளார். இதனை அடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதி கௌசல்யா வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து விட்டு சிறிது நேரம் அங்கிருந்துள்ளார். இதனை அடுத்து விடுதிக்கு செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய தரை கிணற்றில் கௌசல்யா தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தீயணைப்பு படையினர் தேடி வந்தனர். சுமார் 90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அடுத்து ராட்சத குழாய்கள் மூலம் 3 மோட்டார்களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கௌசல்யாவின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கௌசல்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
