'இது என்னோட மனைவியா'... 'வாட்ஸ்ஆப்பில் வந்த போட்டோவால் ஆடிப்போன கணவன்'... நாகர்கோவில் காசி பாணியில் மற்றொரு பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 11, 2020 01:55 PM

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி மற்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது அதைப் போன்று மற்றொரு பகீர் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

Man threatened to expose nude pictures if women didn\'t give money

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கண்டபட்டியை சேர்ந்தவர் சாலமோன். 25 வயதான இவர் சின்ன சின்ன கூலி வேலைகளைச் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜான்சன் மற்றும் மனோசேட். இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். மதுவுக்கு அடிமையான இவர்கள், கிடைக்கும் சின்ன வேலைகளைச் செய்வது மட்டுமே இவர்களது வழக்கம். மற்றபடி வேலைக்கு எதுவும் செல்லாமல் இளம்பெண்களிடம் பேசி அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி அவர்களிடம் பணம் பறிப்பதை தங்களின் முழு நேர வேலையாகச் செய்து வந்துள்ளார்கள்.

முதலில் இளம்பெண்களிடம் நட்பாகப் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பின்னர் காதலிப்பது போல நடித்து, அவர்களோடு ஒன்றாக இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை அவர்களிடம் காட்டி பணம் பறித்து அதன்மூலம் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்நிலையில் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் சாலமோன் பேசி வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போது இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதனிடையே இருவரும் நெருக்கமாக இருந்தபோது சாலமோன் போட்டோ எடுத்துள்ளார்.

அதை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்ட சாலமோன், வீடியோ காலில் அந்த பெண்ணை ஆபாசமாகப் படமெடுத்துள்ளார். அதைத் தனது போனில் பதிவு செய்த சாலமோன், இளம்பெண்ணிடம் அதைக் காட்டி அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார். இளம்பெண்ணும் இந்த வி‌ஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி சாலமோன் பணம் கேட்கும் போதெல்லாம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் சாலமோன் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியில்லாமல் தனது பெற்றோரிடம் இளம்பெண் கூறி உள்ளார்.

Man threatened to expose nude pictures if women didn't give money

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், அவசர அவசரமாக இளம்பெண்ணை வேறு ஒருவருடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்குத் திருமணம் ஆனது. இதனால் ஆத்திரம் அடைந்த சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்குச் சென்றுள்ளனர். அந்த பெண்ணிடம் உடனடியாக ரூ.1 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் தன்னிடம் இருக்கும் ஆபாச படத்தை அவரது கணவர் மற்றும் பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக சாலமோன் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதற்கு இளம்பெண் பணம் இல்லை என்று கூறியதால், அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ், மோதிரத்தை வாங்கிக் கொண்டு சாலமோன், அவரது நண்பர்கள் ஜான்சன், மனோசேட் ஆகியோர் சென்று விட்டனர். இதனால்  என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த இளம்பெண் உடனடியாக தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சாலமோன், இளம்பெண்ணுடன் இருந்த ஆபாசப் படத்தை அவரது கணவர் மற்றும் மாமனாரின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார்.

வாட்ஸ்ஆப்பில் வந்த மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து கணவன் ஆடிப் போன நிலையில், அந்த இளம்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டிலேயே இருக்குமாறு கணவன் கூறி உள்ளார். ஒரு பக்கம் பணம் கேட்டு மிரட்டல், மறுபக்கம் கணவனின் குடும்பத்திற்கு விஷயம் போனதால் அதிர்ச்சியில் அந்த குடும்பம் உறைந்து போக, இளம்பெண்ணின் பெற்றோர் சேரன்மகாதேவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் போலீசார் சாலமோன், அவரது நண்பர்கள் மனோசேட், ஜான்சன் ஆகியோர் மீது கொலை மிரட்டல், பாலியல் ரீதியில் துன்புறுத்துதல், பாலியல் மிரட்டல் விடுத்து பெண்ணிடம் நகை பறித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Man threatened to expose nude pictures if women didn't give money

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி மற்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் சாலமோன் உள்ளிட்ட 3 பேரும் இதுபோல் பல பெண்களிடம் பணம் பறித்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #THREATENED

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man threatened to expose nude pictures if women didn't give money | Tamil Nadu News.