என்ன 'நடந்தாலும்' ரெண்டு பேருக்கும் 'ஒரே மாதிரி' தான் நடக்கும்...! 'கடவுள் ஏன் இப்படி எங்கள தண்டிச்சார்னே தெரியல...' உடைந்து நொறுங்கிய தந்தை...' - இரட்டை சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அனைவரையும் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர், அதுமட்டுமல்லாமல் தன் அன்பானவர்களையும் பிரிந்து வருவது அனைவரையும் மன சோர்வுக்குள் ஆக்கியுள்ளது.
இதேப்போன்று மீராட்டிலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிரிகோரி ரேமண்ட் ரபேல் மற்றும் மனைவி சோஜா தம்பதியினருக்கு ஏப்ரல் 23, 1997 ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரெட் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
கிரிகோரி மற்றும் ரால்பிரெட் இருவரும் கணினி பொறியியல் படித்து ஹைதராபாத்தில் வேலை செய்து வந்தனர். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது தான், கடந்த ஏப்ரல் 24-ஆம் நாள் இருவருக்கும் கொரோனா தொற்று அவர்களை தாக்கியது.
இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரில் ஒருவரான ஜெஃப்ரெட் உயிரிழந்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் மற்றொரு மகன் ரால்பிரட்யும் உயிரிழந்துள்ளார்.
மகன்களை பிரிந்த தந்தை கிரிகோரி ரேமண்ட் ரபேல் இதுகுறித்து கூறும் போது, 'என் மகன்களில் ஒருவருக்கு என்ன நடந்தாலும், அது மற்றொருவருக்கும் நடக்கும். அவர்கள் பிறந்ததிலிருந்து அப்படித்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. ரால்பிரட் தனியாக வீடு திரும்பமாட்டார் என்று ஜெஃப்ரெட் இறந்த செய்தி கிடைத்ததும் நான் என் மனைவியிடம் சொல்லியிருந்தேன். அதுபோன்றே நடந்துவிட்டது.
என் மகன்கள் எனக்கும் என் மனைவிக்கும் நிறைய செய்யவேண்டும் என திட்டங்கள் போட்டிருந்தனர். ஆசிரியர்களாகிய நாங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோம், அவர்கள் அதை எங்களுக்கு திருப்பி கொடுக்க விரும்பினர்.
சமீபத்தில் தான் அவர்கள் கொரியாவுக்கும் பின்னர் ஜெர்மனிக்கும் வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். கடவுள் எங்களை ஏன் இப்படி தண்டித்தார் என்று எனக்குத் தெரியவில்லை' என மனம் உடைந்து கூறியுள்ளார்.
அதோடு 'என் மகன் ஜோஃப்ரெட்டின் முதலில் உயிரிழந்த போது, மற்றொரு மகன் ரால்பிரட் அவன் அம்மாவிற்கு போன் செய்து ஜோஃப்ரெட்டின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
அப்போது நாங்கள் ரால்பிரட்டிடம் ஜோஃப்ரெட்டின் இறந்ததாக கூறவில்லை. ஆனால் அவன் நாங்கள் கூறியதை கண்டுபிடித்து கடைசியாக என் மனைவியிடம், 'நீங்கள் பொய் சொல்கிறீர்கள்' என்று சொல்லி போனை வைத்தார்.