MAHER : மாற்று தேதியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 16வது பட்டமளிப்பு விழா..!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 16வது பட்டமளிப்பு விழா நடக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் 16வது பட்டமளிப்பு விழா இம்மாதம், டிசம்பர் 4-ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 11 மணி முதல், நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேந்தர் A.N.இராதாகிருஷ்ணன், நிறுவன தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாகடர்.டி.சாந்தாராம், துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் நீலகண்டன், பதிவாளர் பேராசிரியர் முனைவர் கிருத்திகா ஆகியோர் பங்குபெறுவதாக இருந்தது. இவர்களுள் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன வேந்தர் A.N.இராதாகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாகவும், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன தலைவர் ஜெயந்தி இராதாகிருஷ்ணன், துவக்கவுரையாற்றுவதாக நிகழ்ச்சி நிரல்கள் முடிவு செய்யப்பட்டிருந்தன.
Image: மறைந்த திரு.A.N. இராதாகிருஷ்ணன்
ஆனால் அதன் பிறகு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான A.N. இராதாகிருஷ்ணன், கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி 2022-ல், சென்னையில் காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது இறுதி சடங்குகள் 04.12.2022 அன்று சென்னையில் நடைபெற்றது. அவரது மறைவை அடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் மாணவமணிகள் அனைவரும் கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 16வது பட்டமளிப்பு விழா, மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் ஆடிட்டோரியத்தில் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
