'அடிச்சு பிரிக்க போகுது'... 'இந்த இடங்களில் இடியுடன் கூடிய கனமழை'... வானிலை ஆய்வு மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வெப்பம் குறைந்துள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரைக் கோவை, நீலகிரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 22ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், ஜூலை 20, 21 தேதிகளில் தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்'' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
