மனைவியை 'அசிங்கமாக' பேசியதால்... மிரண்டுப் போன ஊழியர்கள்... கணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் கம்பம் பஜாஜ் நிதி நிறுவன அலுவலகத்திற்குள் ஒருவர், தன் மனைவியை ஆபாசமாக பேசியதாக கூறி அரிவாளுடன் நுழைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தின் மாதாந்திர தவணைத் தொகை மூலம் செல்போன் வாங்கிய பெண் ஒருவர், சரியாக தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அப்பெண்ணை தொடர்புக் கொண்டு பேசிய ஊழியர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், இதுகுறித்து தன்னுடைய கணவரிடம் அப்பெண் முறையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், நேற்று மாலை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனைக் கண்ட ஊழியர்கள் மிரண்டுப் போயினர்.
பின்னர் அவரிடம் பேச்சு கொடுத்த ஊழியர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு அலுவலகத்தின் வெளிப்பக்கம் பூட்டு போட்டு விட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு போலீசார் வருவதற்கு முன்பே கதவுகள் திறக்கப்பட்டதால் புலம்பியபடியே அந்த நபர் வெளியே சென்றுவிட்டார்.
