கிரிக்கெட் ஆடித்தான் 'குடும்பத்தை' காப்பாத்தணும்... 'அப்பா'க்கு ஹார்ட் அட்டாக்... என்னயும் 'டீமை' விட்டு தூக்கிட்டாங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 13, 2020 12:58 PM

இன்று புகழ் உச்சியில் இருக்கும் ஒவ்வொருவரும், தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு தடைகள், அவமானங்களை தாண்டியே இந்த இடத்துக்கு வந்திருப்பர். அதற்கு கிரிக்கெட் வீரர்களும் விதிவிலக்கல்ல. தோனி, கோலி என எத்தனையோ வீரர்களை அதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

Due to my attitude problem, i was dropped says Hardik Pandya

அந்தவகையில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய இளமைக்காலத்தில் பட்ட கஷ்டங்களை சமீபத்தில் மனந்திறந்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' என்னுடைய குடும்பத்தில் அப்பா மட்டுமே சம்பாதிக்கும் நபர். நான், க்ருணால் இருவரும் பரோடா அணிக்காக அண்டர் 16, அண்டர் 19 அணிகளுக்காக ஆடி வந்தோம்.

இருவரும் விளையாடினால் ஒரு வருடத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்த தொகையை வைத்துத்தான் குடும்பத்தை சமாளித்து வந்தோம். அந்த சமயத்தில் என்னுடைய அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. க்ருணால் அணியில் தன்னுடைய இடத்தை இழந்தார். பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் நானும் என்னுடைய இடத்தை இழந்தேன். வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டம் அது.

அப்போது என்னுடைய முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் காட்ட முடிவு செய்தேன். 17 வயதில் இருந்து 19 வயதுவரை கிரிக்கெட் மட்டுமே என்னுடைய வாழ்க்கையாக இருந்தது. கிரிக்கெட் தவிர்த்து வேறு யாருடனும் பேசுவதை கூட நான் விரும்பவில்லை. வெளி உலகத்துடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உருவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.