'கந்த சஷ்டி'யை இழிவுபடுத்திய விவகாரம்: ’கறுப்பர் கூட்டம்’ மீது, போலீஸ் அதிகாரிகள் எடுத்த அடுத்த ‘அதிரடி’ நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டதன் பெயரில், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும் கண்டனங்கள் கிளம்பியது. அதே போல, பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இந்து முன்னணி கட்சி உட்பட பல இந்து அமைப்புகள் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிரான குரல்களை முன்னெடுத்தது.
தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாரிடம் புகாரளித்த நிலையில், நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் தாமாக முன் வந்து புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் சுரேந்திரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, நேற்று நள்ளிரவு தி நகர் அருகே கண்ணம்மாபேட்டையில் அமைந்துள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து அலுவலகத்தை சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்ட நபரிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.