"குளிக்கும்போது 'ஆபாச' வீடியோ எடுத்து... எங்க பொண்ணு 'சசிகலா'வ 4 வருஷமா துன்புறுத்தி, 'கொலை' செஞ்சுருக்காங்க...!" - நியாயம் வேண்டி 'குடும்பத்தார்' கதறல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு என்னும் பகுதியில் 22 வயது இளம்பெண் சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த இளம்பெண் குளிப்பதை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்த திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் தேவேந்திரன் ஆகியோர், அதனைக் கொண்டு அந்த இளம்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில் மனமுடைந்த சசிகலா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தங்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் தன்னுடைய வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண் சசிகலாவின் மரணம் தொடர்பாக புருஷோத்தமன் சரணடைந்துள்ள நிலையில் அவரது சகோதரரும், திமுக இளைஞரணி செயலாளருமான தேவேந்திரன் என்பவர் மாயமாகியுள்ளார். தனது தங்கை சசிகலா குளிக்கும் போது அதனை ஆபாசமாக வீடியோ எடுத்து கடந்த 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண்ணின் அண்ணன் தற்போது பேட்டியளித்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்து தற்கொலை போல் நாடகம் ஆடியதாகவும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த தகவல் தற்போது மேலும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இளம்பெண்ணின் அண்னன் புகாரளித்துள்ளார்.
சசிகலாவின் தாயார் இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில், 'அண்ணன் போல அன்பாக பேசி எனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நாங்கள் வீட்டில் இல்லாத போது, மகளை மிரட்டியும், வீட்டில் இருக்கும் போது சிரித்து பேசி நல்லவர்களாக நடித்து எங்களை ஏமாற்றி விட்டனர்' என மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனை விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் குடும்பத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
செய்யாறு இளம்பெண் மரணம் குறித்து பெரிதாக எந்த ஊடகமும் செய்திகள் வெளியிடவில்லை எனவும் பலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
