‘சிக்கியது முக்கிய ஆதாரம்’!.. இ-மெயில் மூலம் பல ஆண்டுகளாக ‘ஆபாச சாட்’.. சிவசங்கர் பாபா வழக்கில் அதிரடி திருப்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா இப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 18-ம் தேதி சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அளித்த மனு மீதான விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த Yahoo மின்னஞ்சல் முகவரி கண்டுபிடிக்கப்படுள்ளது. அதில், பள்ளி மாணவிகளிடம் ‘ஆபாச சாட்’ செய்ததற்கான ஆதாரமும், மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதற்கான ஆதராமும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா பயன்படுத்தி வந்த லேப்டாப், பென் ட்ரைவ், பிளாப்பி டிஸ்ட் உள்ளிட்டவற்றை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது சிபிசிஐடி விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்ற செய்திகள்
