இந்தியா - பாகிஸ்தான் 'மேட்ச்' பாக்க... உலகமே தவம் கெடக்குது... சீக்கிரம் ஆரம்பிங்கப்பா... விருப்பம் தெரிவித்த 'பாகிஸ்தான்' வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஓட்டுமொத்த கிரிக்கெட் உலகை பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கென்று ஒரு பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உண்டு.

இரு அணிக்கு இடையே தோன்றும் ஆக்ரோஷம், வேகம் என போட்டி முழுக்க பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இரு அணிகள் இதுவரை மோதியுள்ள போட்டிகளில் பல மறக்க முடியாத தருணங்கள் உள்ளன. கடைசி நிமிடம் வரை பல ஆட்டங்கள் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடந்துள்ளது. அதை விட உலக கோப்பை போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதிக் கொண்டால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேறு ஒன்றும் தேவையில்லை.
ஆனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள உறவுகள் காரணமாக இரு அணிகளும் உலக கோப்பை போட்டிகள் தவிர தனி தொடர்களில் மோதிக் கொள்ளவில்லை. கடைசியாக இரு அணிகளும் 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி 20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரில் மோதிக் கொண்டன. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் கருத்து தெரிவித்துள்ளார்.
'இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் ஆட்டத்தை மீண்டும் காண இந்த உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். எனது பாகிஸ்தான் நண்பர்கள் சிலர் இந்திய கிரிக்கெட் வீரர்களை நேசிக்கின்றனர். இந்திய அணி மோதும் போட்டிகளை ரசித்து பார்க்கவும் செய்கின்றனர். அதே போல, இந்திய வீரர்கள் மீது அவர்களுக்கு தனி மரியாதையும் உள்ளது. நானும், எனது அணி வீரர்களும் கூட இந்திய அணியுடன் மோதும் போது எங்களது அன்பு மற்றும் ஆதரவை அளிப்போம். அதனால் இந்தியா பாகிஸ்தான் மோதும் தொடரை காண மிகவும் ஆவலுடன் உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
