‘கோபம் தலைக்கேறிய ராகுல் திவேதியா!’.. ‘களத்துக்கு வந்த வார்னர்!’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்?’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்!’.. இறுதியில் மனம் திறந்த ராகுல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவேதியா கடைசி ஓவரில் மிகவும் கோபமாகிய சம்பவம் பெரிய சர்ச்சையாகியது. கடைசி ஓவரில் ஹைதராபாத் வீரர் கலீலுடன் இவர் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

போட்டி தொடக்கத்தில் இருந்து கட்டுப்பாட்டில் இருந்த ஹைதராபாத் அணியின் ரிசல்ட்டை ராஜஸ்தான் வீரர்கள் ராகுல் திவாதியா, ரியான் பராக் மொத்தமாக தலைகீழாக மாற்றி ராஜஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் 65 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது.
ஹைதராபாத் அணியை பொருத்தவரை, பவுலிங் வலிமையாக இருந்ததால் ராஜஸ்தான் தோற்றுவிடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் ராகுல் திவேதியா 28 பந்தில் 45 ரன்களும், ரியான் பாரக் 26 பந்தில் 42 ரன்களும் கடைசி கட்டத்தில் எடுத்து அதிரடியாக ஆடியதால், 158 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அணியின் ஸ்கோரை மிஞ்சியதுடன் ராஜஸ்தான் 163 ரன்களை எடுத்து அபாரமாகவே வென்றது.
போட்டியின்போது, 18வது ஓவரில் ரஷீத் வீசிய ஒரு பந்தை, க்ரீஸை விட்டு இறங்கி வந்து அடிக்க முயற்சித்த ராகுல் திவேதியா, அந்த பந்தை தவறவிட, அந்த பந்து ஸ்டெம்பில் பட்டது. ஆனால் ஸ்டெம்பில் பட்டது. எனினும் ஸ்டம்பின் பைல்ஸ்கள் கீழே விழவில்லை என்பதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஒருவேளை பந்து விக்கெட் கீப்பர் கையில் போயிருந்தால் அது ஒரு எளிதான விக்கெட்டாக மாறியிருக்கும்.
பின்னர் கலீல் போட்ட 19வது ஓவரில் 8 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ராஜஸ்தான் வீரர்கள் இருவரும் சிங்கிள் அடித்தும், 2 ரன்கள் ஓடியும் இலக்கை நெருங்கினர். பேட்டிங் செய்து வந்த ராகுல் திவேதியாவிடம் அப்போது அங்கு வந்த கலீல் அஹமது ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால், திவேதியா கடுமையாக ஆத்திரம் கொண்டார்.
There was some heat between Rahul Tewatia and Khaleel Ahmed in the final over, David Warner straight after the match came towards Tewatia and had words with him. Amazing from Warner to sort small issues out right there. Here full video #SRHvsRR #Tewatia pic.twitter.com/qw6EtqYsYt
— Ashish Sahani (@AshishCupid11) October 11, 2020
பின்னர் ராகுல் திவாதியா ஒரு சிங்கிள் அடித்துவிட்டு ரன்னர் எண்டிற்கு சென்றார். அங்கு கலீல் அஹமதிடம் திவேதியா, “நீங்கள் எப்படி அப்படி பேசலாம் என்று கடுமையாக கேள்வி எழுப்ப, அப்போது “சண்டைக்கு செல்ல விருப்பம் இல்லை.. என்னை விட்டுவிடு” என்பது போல கலீல் திவேதியாவிடம் கூற, கட்டுக்கடங்காத திவேதியா விட்டுக்கொடுக்காமல், அந்த ஓவர் முடியும் வரை கோபமாகவே இருந்தார்.
ஓவர் முடிந்த பின்பும் கோபமாக சென்று, கலீலிடம் திவேதியா, “நீங்கள் ஏன் அப்படி பேசினீர்கள்” என்று கேள்விகளை எழுப்பினார். அதற்கு கலீல் பதில் சொல்லாததால், சண்டை முற்றியது. வார்னர் வேகமாக களத்திற்கு வந்து திவேதியாவை சமாதானம் செய்தார். அப்போது வார்னரிடமும் திவேதியா கடுமையாக பேசினார். பின்னர்கள் நடுவர்கள் சமாதானம் செய்து இருதரப்பு வீரர்களையும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய ராகுல் திவேதியா, “அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை, நாங்கள் சூடான வாதத்துக்கு ஆட்பட்டோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான்!” என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
