"உங்கள ரொம்ப மிஸ் பண்றோம்"... 'புகைப்படம்' ஒன்றை பதிவிட்டு... 'ஃபேன்ஸ்'களின் லைக்குகளை அள்ளிக் குவித்த மாயந்தி 'லாங்கர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒவ்வொரு ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரும் போட்டி மற்றும் விளையாடும் இரு அணிகள் குறித்து தொகுப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் சரியாக எடுத்து விவரிப்பர்.

அப்படி விவரிக்கும் தொகுப்பாளர்களுக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதில் மிக முக்கியமான நபர், இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான மாயந்தி லாங்கர் ஆகும். தொகுப்பாளர், வர்ணனை என இரண்டிலும் சிறப்பாக அசத்தக் கூடிய மாயந்தி, தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தான் தொகுப்பாளராக கலந்து கொள்ளப் போவதில்லை என ஐபிஎல் தொடருக்கு முன் அவர் தெரிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அவர் பங்கேற்காததன் காரணத்தையும் மாயந்தி லங்கர் தெரிவித்திருந்தார். தனக்கு ஆண் குழந்தை பிறந்திருந்ததனால் தான் தன்னால் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் போனதாக அவர் தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல், தனது கணவர் ஸ்டூவர்ட் பின்னி மற்றும் குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் தன்னுடைய கைக் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பதிவு அதிகம் வைரலாகி வருகிறது.
The real joy of #wfhlife #momlife 💖 pic.twitter.com/Ar88rZH1se
— Mayanti Langer Binny (@MayantiLanger_B) October 1, 2020

மற்ற செய்திகள்
