VIDEO: எல்லாம் 'அவரோட' ராசி தான்... எப்படி பறந்து வந்துருக்காரு பாருங்க... வைரலாகும் 'லேட்டஸ்ட்' லுக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது. கொல்கத்தா அணி தன்னுடைய 2-வது வெற்றியை ருசித்து எதிரணிகளுக்கு மரண பயம் காட்டி இருக்கிறது. குறிப்பாக நேற்று கொல்கத்தா அணியின் பவுலிங், பேட்டிங், பீல்டிங் எல்லாமே வேற லெவலில் இருந்தது.

அதிலும் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியதை பார்த்த ரசிகர்கள் நம்ம கொல்கத்தா டீமா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் சிலரோ அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் அணியினரை உற்சாகப்படுத்த நேரில் சென்றதால் அவரின் ராசி தான் அனைத்துக்கும் காரணம் என ஷாரூக்கை புகழ்ந்து வருகின்றனர்.
ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் நடைபெற்று வரும் போட்டிகள் வீரர்களுக்கு லேசான சோர்வை அளித்துள்ளன. இந்த நிலையில், ஷாரூக் தன்னுடைய மகன் ஆர்யன் கானுடன் நேரில் சென்று போட்டியை ரசித்து தன்னுடைய அணியினரை உற்சாகப்படுத்தியது, கிரிக்கெட் ரசிகர்களை சியர்ஸ் சொல்ல வைத்துள்ளது.
அதே நேரம் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 2-வது முறையாக சொற்ப ரன்களில் சொதப்பி ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். அவரும் பார்முக்கு வந்து விட்டால், கப்புக்கான ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கும் கண்டிப்பாக இடம் கிடைக்கும்!
King Khan is in the house, cheering for his lads.@iamsrk | #Dream11IPL #RRvKKR pic.twitter.com/1ZGZdrMOlt
— IndianPremierLeague (@IPL) September 30, 2020
Captain #DineshKarthik and King #ShahRukhKhan sharing smile after the win tonight! 💜💛@iamsrk @KKRiders @DineshKarthik @Russell12A #ShahRukhKhan #SRiYAN #KKRHaiTaiyaar #KKR pic.twitter.com/8moQ6a2Yxa
— Sriyan Official Group (@TeamSriyan) September 30, 2020
[FULL HQ]: Khaandaan together! #ShahRukhKhan #SRiYAN #RRvKKR #IPL2020 #GauriKhan #AryanKhan pic.twitter.com/taTsXEApYZ
— Sriyan Official Group (@TeamSriyan) September 30, 2020

மற்ற செய்திகள்
