VIDEO: 'ஜென்டில்மேன் கேம்ன்னு நிரூபிச்சிட்டாரு யா மனுஷன்'... 'கண்ணுக்கு முன்னாடி இருந்த கங்காரு கேக்'... நெகிழவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிளையாட்டு உலகில் விதிகளுக்குட்பட்டு விளையாடும் அணிகளும் சரி, வீரர்களும் சரி எப்போதும் ரசிகர்களின் மனதுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், இந்திய ஸ்டேன்ட் இன் கேப்டன் ரகானே செய்த ஒரு விஷயம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை தொட்டு விட்டது.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காவஸ்கர் - பார்டன் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறியும் வீரர்களின் ஒழுக்கமின்மையும் அப்பட்டமாகவே வெளிப்பட்டது.
இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சு, பேட்டிங் இவற்றை தவிர்த்து ரசிகர்கள் மற்றும் வீரர்களின் ஸ்லெட்ஜிங்கையும் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.
எனினும், முன்னணி வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய கேப்டன் அஜிங்கிய ரகானே சிறப்பாக அணியை வழி நடத்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தி விட்டார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து தாயாகம் திரும்பிய கேப்டன் ரகானேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரின் நண்பர்கள் முடிவு செய்திருந்தனர். அதற்காக, ஒரு ஸ்பெஷல் கேக் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.
அந்த கேக் கிரிக்கெட் பிட்ச்சில் கங்காரு இருப்பது போலவும் அதன் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியிருப்பத போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்த ரகானே, கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. ஆஸ்திரேலிய அணியை கூட கங்காரு என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அந்த வகையில், கங்காரு கேக் வெட்டு நாகரீகமான விஷயமாக இருக்காது என்று கூறி வெட்ட மறுத்தார். பிறகு, கங்காரு அகற்றப்பட்டு கேக் வெட்டினார்.
எனவே, களத்தில் மட்டுமல்ல நடத்தையிலும் ஆஸ்திரேலியர்களை வீழ்த்தியுள்ளார் ரகானே என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்ற செய்திகள்
