‘இவர் இப்படி கோவப்பட்டு பார்த்ததே இல்லயே’.. தமிழக வீரரை கடுமையாக சாடிய கேப்டன்.. அப்படி என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் மைதானத்தில் திட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 30-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 103 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. ஆரோன் பின்ச் மற்றும் சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் முதல் பந்திலேயே சுனில் நரேன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஆரோன் பின்ச் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அப்போது ஆரோன் பிஞ்ச் 58 ரன்களுக்கு அவுட்டானார்.
மறுமுணையில் ஸ்ரேயாஸ் ஐயர் 85 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் கடைசி 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. அப்போது ஆட்டத்தின் 16-வது ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். இதனை எதிர்கொண்ட தமிழகத்தை சேர்ந்த வீரரான வெங்கடேஷ் ஐயர் டீப் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது வெங்கடேஷ் ஐயரை 2-வது ரன்னுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அழைத்தார்.
இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் பாதி பிட்ச் வரை வந்துவிட்டார். ஆனால் பந்து பீல்டரின் கைக்கு சென்றதால், வெங்கடேஷ் ஐயர் அங்கேயே நின்றுவிட்டார். இதனால் மீண்டும் பின்னோக்கு ஓடி ரன் அவுட்டில் இருந்து தப்பினார். இதில் கோபமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், களத்திலேயே வெங்கடேஷ் ஐயரை ஆவேசமாக திட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ‘இவர் இப்படி கோபப்பட்டு பார்த்ததே இல்லை’ என பலரும் ஸ்ரேயாஸ் ஐயரை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்போட்டியில் 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
— Addicric (@addicric) April 18, 2022