"அட, நம்ம ஷ்ரேயாஸ் ஐயருக்கு இப்டி ஒரு ரசிகையா??.." மழையில் 2 மணி நேரமா வெயிட்டிங்.. கடைசியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jul 21, 2022 10:13 PM

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளது.

Shreyas iyer fan waits for two hours to meet him in west indies

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்து இந்திய அணி மோத உள்ளது.

இதில், முதலாவதாக ஒரு நாள் தொடர், நாளை (ஜூலை 22) ஆரம்பமாகிறது. மேலும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.

இதன் பின்னர் நடைபெற உள்ள டி 20 தொடரில், இந்திய அணியை மீண்டும் ரோகித் சர்மா தலைமை தாங்க உள்ளார். இதிலும், கோலி மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தது.

Shreyas iyer fan waits for two hours to meet him in west indies

ஒரு நாள் தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அங்கு தொடங்கிய பயிற்சி முகாமில், திடீரென மழை குறுக்கிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய அணி வீரர்கள் Indoor இடத்தில் வலைப்பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்திய வீரர்கள் மிக தீவிரமாக ஒரு நாள் தொடருக்காக தயாராகி வரும் நிலையில், பயிற்சிக்கு மத்தியில் நடந்த சம்பவம் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை குறுக்கிட்டதன் காரணமாக, வீரர்களைக் காண வந்த ரசிகர்கள் பாதிலேயே திரும்பி உள்ளனர். ஆனால், சுமார் இரண்டு மணி நேரம், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதும், அதனை எதிர்கொண்டு அங்கே காத்துக் கொண்டிருந்துள்ளார் ஒரு பெண்.

Shreyas iyer fan waits for two hours to meet him in west indies

இதற்கு காரணம், அவர் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் தீவிர ரசிகை என்பது தான். எப்படியாவது, அவரை நேரில் சந்தித்து, ஆட்டோகிராஃப் வாங்கி விட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த அந்த பெண், வலைப்பயிற்சி செய்யும் இடத்திற்கு வெளியே சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்துள்ளார்.

Shreyas iyer fan waits for two hours to meet him in west indies

இதனைத் தொடர்ந்து, நீண்ட நேரம் காத்திருந்த தனது ரசிகை கொண்டு வந்த சிறிய பேட் ஒன்றில், ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். தீவிர ரசிகையான அந்த பெண், காத்திருந்தது வீண் போகவில்லை என்பதால் மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #SHREYAS IYER #IND VS WI #FAN GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shreyas iyer fan waits for two hours to meet him in west indies | Sports News.