"வார்னே என்னை முட்டாளாக்கினார்!".. "அணிக்கு தேர்வு செய்ய லஞ்சம் கேட்டப்போ என் தந்தை சொன்னது இதான்!".. "உடைந்து அழுதேன்!".. கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | May 19, 2020 09:10 PM

தன்னுடைய சுழற்பந்து வீச்சு திறமையால் ஷேன் வார்னே தன்னை முட்டாளாக்கியதாக இந்த கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

shane warne made me fool,my father refused to bribe, kohli memories

கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெ போட்டிகள் நடக்கவில்லை. எனினும் கிரிக்கெட் வீரர்கள் தொடர் பேட்டிகளையும் சுவாரஸ்யமான புகைப்படம் மற்றும் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்ஃபோ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானும், சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னேவுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய கோலி,  “2009- ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஷேன் வார்னே தனது திறமையான சுழற்பந்து வீச்சால் என்னை முட்டாளாக்கினார். பின்பு 2011ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது அவர் என்னை அவுட் ஆக்கவில்லை என்றாலும், அவரது பந்து வீச்சில் என்னால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய கோலி,  “என்னிடம் வந்த ஷேன் வார்னே பேட்டிங் செய்யும் போது எப்போதும் பவுலரிடம் பேசாதே என்றார். எப்போதும் போல நான் அவரது அறிவுரையை ஏற்கவில்லை என்றும் சொன்னார்” என்று கலகலப்பாக தெரிவித்துள்ளார். இதேபோல், கோலி பற்றி பேசிய ஷேன் வார்னே, “கோலி போன்ற திறமையானவர்களுக்கு பிட்சின் இருபுறமும் கூட பந்து வீச வேண்டாம். நேராக பந்து வீசினாலே பவுலர்களுக்கு அது பாதகமாகவே முடியும்!” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் வேறொரு போட்டியில், “என்னை டெல்லி ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்ய லஞ்சம் கேட்டார்கள். அப்போது எனது தந்தை லஞ்சம் கொடுக்க மறுத்ததோடு சொந்த உழைப்பாலும் திறமையாலும்தான், நான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சொந்தமாக உழைத்து முன்னேறிய தனது தந்தை அப்படித்தான் வழக்கறிஞரானார். இந்த உலகம் இப்படிதான் இருக்கும், ஆனால் நாம் நம் சொந்த திறமையால் முன்னேற வேண்டும் என்று அன்று கற்றுக்கொண்டேன். நான் தேர்வு செய்யப்படவில்லை என உடைந்து அழுதேன்” என்று கோலி குறிப்பிட்டுள்ளார். 18 வயதில் டெல்லி-கர்நாடகா ரஞ்சி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கோலியின் தந்தை இறந்ததும், அந்த துக்கத்திலும் டெல்லி அணிக்காக ஒரு இன்னிங்ஸ் ஆடி அணியைக் காப்பாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.