'அந்த மனுஷன் செம மூளைக்காரர் தான்'... 'இந்த ஐபிஎல்ல தெறிக்க விட போறாரு'... பொடி வைச்சு பேசிய 'சேவாக்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசேவாக் கூறியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி குறித்தும் கேப்டன் தோனி குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ''தோனியின் கேப்டன்சி திறமையை உலகமே அறியும். ஆனால் அவர் ஆட்டத்திற்கு முன்னதாக எதுவும் திட்டமிடமாட்டார். ஆட்டத்தின்போது களத்தில் நடக்கும் சூழலுக்கு ஏற்ப தான் பல முடிவுகளை எடுப்பார். எதிரணியில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப பவுலர்களை பந்து வீச வைப்பது அவரின் தனித்திறன்.
ஒரு பேட்டஸ்மேன் வேகப்பந்து வீச்சை சுலபமாகக் கையாண்டால் சுழற்பந்து வீச்சை கொண்டு வருவார். அதுவே சுழற்பந்து என்றால் வேகப்பந்து வீச்சாளரைக் களம் இறக்குவார். அதற்கு ஒரு பெரிய உதாரணமாக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இஷான் கிஷன் தனது விக்கெட்டை பறிகொடுத்ததைக் கூறலாம். அதற்கு முக்கிய காரணம் தோனி செய்திருந்த அருமையான ஃபீல்ட்டிங் தான். இதனால் நடப்பு சீசனில் செம ஷார்பான மூளையைக் கொண்டவர் தோனி என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்'' எனச் சேவாக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
