"எல்லாத்துக்கும் 'கவுதம்' அண்ணா தான் காரணம்.." ஒரே மேட்ச்'ல திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்.. 'சிஎஸ்கே' மேட்ச்'லயும் சம்பவம் 'LOADING' போல
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறவிருக்கும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளது.
இந்திய வீரரை குறிப்பிட்டு.. அடல்ட் பட நடிகை போட்ட ட்வீட்.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்
முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி தோல்வி அடைந்திருந்தது.
அதே போல, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி தோல்வியை தழுவி இருந்தது.
இரு அணிகளும், 15 ஆவது ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கி உள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி கணக்கைத் தொடங்குவதற்கான முழு முயற்சியில் இரு அணிகளும் இறங்கும். இதனால், போட்டி முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்
குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில், குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னோ அணி. அப்போது, தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி ஆகிய இருவரும் அரை சதமடித்து நல்ல ரன்னை எட்ட உதவினார்.
இதில், 22 வயதே ஆகும் ஆயுஷ் படோனி, தன்னுடைய அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அரை சதமடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒரே ஒரு போட்டியில், மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தன் பக்கம் திருப்பியுள்ளார் படோனி. அதே போல, அவரின் பல ஷாட்களும் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது.
கவுதம் அண்ணா தான் காரணம்
இதனையடுத்து, போட்டிக்கு பின் பேசி இருந்த ஆயுஷ் படோனி, "கவுதம் அண்ணா தான் எனக்கு அதிகம் உதவினார். என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தான் அவர் என்னை அறிவுறுத்தினார். பவுலர் யார் என்பதை பார்க்காமல், பந்தினை பார்த்து ஆடு என்றும் கூறினார். நீ சூழ்நிலைக்கேற்ப ஆட வேண்டாம் என்றும், அதனை மேற்கொள்ள சீனியர் வீரர்கள் அணியில் உள்ளார்கள் என்றும் கம்பீர் கூறினார். இதனால், நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.
கடந்த மூன்று சீசன்களாக ஐபிஎல் ஏலத்தில், 'Unsold' வீரராக நான் அறிவிக்கப்பட்டிருந்தேன். லக்னோ அணி இந்த முறை என் மீது நம்பிக்கை வைத்து, என்னை தேர்வு செய்துள்ளது. அதற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். அதே போல, பயிற்சி போட்டிகளில் நான் இரண்டு முறை அரை சதமடித்து இருந்தேன். இதனால், ஈர்க்கப்பட்ட பயிற்சியாளர்கள், என்னை போட்டியில் களமிறக்கினார்கள்" என படோனி தெரிவித்துள்ளார்.
கம்பீரின் பங்கு
கொல்கத்தா அணி இதுவரை ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரண்டு முறையும், கவுதம் கம்பீர் தான் கொல்கத்தா அணியை தலைமை தாங்கி இருந்தார். தற்போது, அவர் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, ஐபிஎல் ஏலத்திலும் வீரர்கள் தேர்வில் முக்கிய பங்காற்றி இருந்தார். அது போக, படோனி போன்ற இளம் வீரரை நன்கு தயார் செய்து களமிறக்கி உள்ளார்.
அந்த வகையில், சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டியிலும், படோனியின் பேட்டிங் பெரிய பங்கு வகிக்குமா என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.