"இவருக்கா இப்டி நடக்கணும்?.." ஐபிஎல் போட்டிக்கு நடுவே தோன்றிய இஷாந்த் ஷர்மா.. அந்த கோலத்த பார்த்து வேதனைப்பட்ட ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் சீசன், கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று ஆரம்பமாகி இருந்த நிலையில், அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்து முடிந்த 7 போட்டிகளில், இரண்டு முறை 200 க்கும் மேற்பட்ட இலக்கைக் கூட அணியினர் எட்டிப் பிடித்து அசத்தி வருகின்றனர்.
இதனால், எந்த நேரத்தில் எப்படி போட்டி மாறும் என்பதும், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டி, கிட்டத்தட்ட கடைசி ஓவர் வரை செல்வதும், ஐபிஎல் ரசிகர்களை ஒரு வழி பண்ணி விடுகிறது.
ஐபிஎல் மெகா ஏலம்
இதனிடையே, பிரபல இந்திய வீரர் ஒருவரை புதிய கோலத்தில், ஐபிஎல் போட்டிக்கு நடுவே கண்டதும், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஐபிஎல் தொடருக்கு வேண்டி, கடந்த பிப்ரவரி மாதம், மெகா ஏலம் நடைபெற்றிருந்தது. பல இளம் வீரர்களை சில அணிகள் தட்டித் தூக்கி இருந்தது. அதே போல, அனுபவமுள்ள சீனியர் வீரர்களை எடுக்கவும் கடும் போட்டி நிலவி இருந்தது.
நட்சத்திர வீரர்கள் 'Unsold'
இன்னொரு பக்கம், சில முக்கிய வீரர்கள் 'Unsold' என அறிவிக்கப்பட்டிருந்ததும் கடும் சோகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. ரெய்னா, ஸ்மித், இஷாந்த் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களை எந்த அணியும் கண்டு கொள்ளவில்லை. இதில், 33 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு 1.5 கோடி ரூபாய் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மனம் வருந்திய ரசிகர்கள்
அவரை எடுக்க எந்த அணிகளும் முன் வரவில்லை. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வந்த இஷாந்த் ஷர்மாவுக்கு, தற்போதைய இந்திய அணியிலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி ஒரு நிலையில் தான், ஐபிஎல் போட்டி ஒன்றின் நடுவில், இஷாந்த் ஷர்மாவைக் கண்டதும், ரசிகர்கள் மனம் வருந்தி போனார்கள்.
விர்ச்சுவல் கெஸ்ட் பாக்ஸ்
ஒவ்வொரு போட்டிக்கு நடுவே 'விர்ச்சுவல் கெஸ்ட் பாக்ஸ்' என்ற ஒன்றை திரையில் காண்பிப்பார்கள். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் முகம் தெரியும். அந்த வகையில், ஒரு ரசிகரை போல, இந்த திரையில் இஷாந்த் ஷர்மா தோன்றியது, ரசிகர்களை மேலும் சங்கடத்துக்கு ஆள் ஆக்கியது. மேலும், அந்த சமயத்தில் போட்டியின் வர்ணனையாளர் கூட இஷாந்த் ஷர்மா பற்றி எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.
நட்சத்திர வீரரான ஒருவர் இப்படி ஐபிஎல் போட்டிக்கு நடுவே தோன்றியது பற்றி, ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை ட்விட்டரில் வேதனையுடன் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.