கேப்டன் ரோஹித் ஷர்மா.. இப்டி ஒரு சிக்கல்'ல மாட்டிகிட்டாரே??.. சுத்தி ரிஸ்க்.. எப்படி தான் சமாளிக்க போறாரோ?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படவுள்ள நிலையில், அவர் சந்திக்கவுள்ள சிக்கல் ஒன்றை குறித்து காண்போம்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ள ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களுக்கான இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இரு அணிகளிலும் தலா 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் அதிகம் பேர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அது மட்டுமில்லாமல், சமீபத்தில் தொடர்ந்து ஆடிய வீரர்கள் பலரின் பெயரும் இதில் இடம்பெறவில்லை.
இளம் வீரர் அறிமுகம்
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு ஒரு நாள் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. அதே போல, ஐபிஎல் தொடரில் தனது சுழற்பந்து வீச்சில் அசத்திய இளம் வீரர் ரவி பிஷ்னோய், ஒரு நாள் மற்றும் டி 20 அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.
சவால்
அதே போல, தென்னாப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக ஆடாமல் போன ரோஹித் ஷர்மா, தற்போது குணமடைந்துள்ளார். இதனால், அவர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மட்டுமில்லாமல், இந்திய அணியை தலைமை தாங்கவும் உள்ளார். ஒரு நாள் போட்டியில் புதிய கேப்டனாக செயல்படவுள்ள ரோஹித் ஷர்மாவிற்கு முதல் தொடரிலேயே முக்கிய சவால் ஒன்று காத்திருக்கிறது.
பந்து வீச்சாளர்கள்
தென்னாப்பிரிக்க தொடரை ஒப்பிடும் போது, இந்திய அணியின் பந்து வீச்சில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு இரண்டு தொடரில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
அனுபவம் இல்லை
தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 அணியைப் பொறுத்தவரையில், வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் மட்டும் தான் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். மற்ற வீரர்களான சிராஜ், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகிய இளம் வீரர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், சாஹல் மற்றும் அக்சர் படேல் இருப்பது நிச்சயம் கை கொடுக்கும் என்றே தெரிகிறது.
சுழற்பந்து வீச்சாளர்கள்
இன்னொரு பக்கம், ஒரு நாள் போட்டி அணியின் வேகப் பந்து வீச்சில், அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாருமே இல்லை. தீபக் சாஹர், சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வந்தாலும் அனுபவம் இல்லாதது மட்டும் தான் ஒரு வேளை இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என் தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளனர். இதனால், ஒரு நாள் அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் அதிகம் அனுபவ வீரர்களாக உள்ளனர்.
என்ன செய்ய போகிறார் ரோஹித்?
ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்கள், இந்திய அணியில் இடம்பெற்றாலும், அனுபவம் இல்லாதது மட்டும் தான் ஒரு குறையாக உள்ளது. கேப்டனாக கோதாவில் இறங்கும் ரோஹித் ஷர்மா, எப்படி அதனைக் கையாளப் போகிறார் என்பதை அனைவரும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அனுபவம் கை கொடுக்கும்
ஆனால், இன்னொரு பக்கம், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ள ரோஹித் ஷர்மா, பல இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி, அதில் வெற்றி பெறவும் செய்துள்ளார். அந்த அனுபவம், நிச்சயம் அவருக்கு சர்வதேச போட்டியிலும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.