IPL 2022 : திடீரென மோதிக் கொண்ட வீரர்கள்.. "ஓவர் முடிஞ்ச நேரத்துல எதுக்குங்க சண்டை போட்டாங்க??.." பரபரப்பை ஏற்படுத்திய 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ராஜஸ்தான் அணி, முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறி இருந்தது.
அடுத்தடுத்து சதங்கள் அடித்திருந்த ஜோஸ் பட்லர், இன்றைய போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹேசல்வுட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தனியாளாக போராடிய ரியான் பராக்
மற்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் ரன் சேர்க்காமல், வேகமாக அவுட்டாகி கிளம்ப, இளம் வீரர் ரியான் பராக் மட்டும் தனியாளாக நின்று ரன் சேர்க்க ஆரம்பித்தார். கடைசி வரை களத்தில் இருந்த ரியான், 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட ராஜஸ்தான், ரியான் பராக்கின் ஆட்டத்தின் மூலம், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை எடுத்திருந்தது. எந்த போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் அடிக்காமல் இருந்து வந்த ரியான் பராக் மீது அதிகம் விமர்சனம் வைக்கப்பட்டு வந்தது. எதற்காக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் நிறைய பேர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மீண்டும் சொதப்பிய ஆர்சிபி
ஆனால், நெருக்கடியான சூழ்நிலையில் அணிக்காக ரன் சேர்த்து கொடுத்து, தன்னுடைய திறனை நிரூபிக்கவும் செய்துள்ளார் ரியான் பராக். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சில் சிக்கித் தவித்தது. இதிலிருந்து கடைசி வரை மீள முடியாத பெங்களூர், 115 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால், 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
மோதிக் கொண்ட வீரர்கள்
இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவடைந்த சமயத்தில் இரண்டு வீரர்கள் கருத்துக்கள் மூலம் மோதிக் கொண்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரியுடன் மொத்தம் 18 ரன்களை ரியான் பராக் குவித்தார். அதிலும் குறிப்பாக, கடைசி பந்தினை சிக்சருக்கு விரட்டினார் ரியான். இதனால், ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தது. அப்போது தான் ரியான் பராக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர், திடீரென சில வாரத்தைகளை பரிமாறிக் கொண்ட வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
ரியான் பராக் பேட்டிங் முடித்து விட்டு நடந்து செல்ல, திடீரென திரும்பி சென்று, ஹர்ஷல் படேலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் ஏதோ பேச, பதிலுக்கு ஹர்ஷல் படேலும் சில வார்த்தைகளை கோபத்துடன் பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து, ராஜஸ்தான் அணியில் உள்ள ஒருவர் இருவரையும் தடுத்து நிறுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Harshal vs riyan parag fight#RCBvsRR #parag #HarshalPatel #IPL20222 pic.twitter.com/Xotv4DGF8T
— John cage (@john18376) April 26, 2022
ஹர்ஷல் படேல் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மோதிக் கொண்டதற்கான காரணம் என்ன என்பது சரி வர தெரியவில்லை.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
