VIDEO : "ஜஸ்ட் மிஸ்..." 'பவுண்டரி' லைனுக்கு அருகே 'மேஜிக்' செய்து காட்டிய 'ரஷித் கான்'... வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான டி 20 பிக் பேஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆறு போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், ஐந்தாவது போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் மற்றும் அடலய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ஹோபர்ட் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அதிரடி வீரர் கோலின் இங்க்ராம், சிக்ஸருக்காக பந்தை ஓங்கி அடித்தார்.
அப்போது சிக்ஸர் லைனுக்கு அருகே நின்ற ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், அந்த பந்தை சற்று சாய்வாக பந்து பவுண்டரிக்கு போகாத படி பிடித்த நிலையில், பவுண்டரி கோட்டிற்கு அருகே அவரது கால் இருந்தது. ஆனால், பிடித்த பந்தை சிக்சராக மாற்றாமல், தனது திறமையால் மிகவும் அற்புதமாக அதனை விக்கெட்டாக மாற்றினார்.
So good to have Rashid Khan back in Australia - because he does things like this! @BKTtires | #BBL10 pic.twitter.com/8qkofnlYop
— cricket.com.au (@cricketcomau) December 13, 2020
முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் நிகோலஸ் பூரன், ஆர்ச்சர் ஆகியோர் செய்த அற்புதமான ஃபீல்டிங் அதிகம் வைரலாகியிருந்த நிலையில், பிக் பேஷ் தொடரிலும் சில கேட்ச் தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
