"ப்பா, பிச்சுட்டாங்க.." செம கூலாக பி.வி. சிந்து போட்ட டான்ஸ்.. "பேட்மிண்டன்'ல மட்டுமில்ல, டான்ஸ்'லயும் கில்லி தான் போல.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் பி.வி. சிந்து. தனது பேட்மிண்டன் விளையாட்டுத் திறனால், இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

Also Read | காபி ஆர்டர் எடுக்கும் ட்விட்டர் சிஇஓ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. பின்னணி என்ன??
அது மட்டுமில்லாமல், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கமும் வென்று அசத்தி உள்ளார் பி.வி. சிந்து. விளையாட்டு வீராங்கனையான இவர், சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடுத்தடுத்து ரீல்ஸ் வீடியோக்கள், புத்தம் புது ஆடைகளில் புகைப்படங்கள் என சிந்து வெளியிடும் பதிவுகள் பலவும் இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வரும்.
பி.வி. சிந்து போட்ட 'டான்ஸ்'
அதிலும் குறிப்பாக, இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கும் நடனமாடி ஏராளாமான ரீல்ஸ் வீடியோக்களையும் பி.வி. சிந்து வெளியிட்டுள்ளார். இதில், கச்சா பாதம் மற்றும் மயக்குறியே உள்ளிட்ட பல பாடல்களுக்கு சிந்து ஆடி இருந்த நடனங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி இருந்தது. அந்த வகையில், தற்போது பி.வி. சிந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
"மகிழ்ச்சி தர்றத பண்ணுங்க.."
'Head Shoulders Knees and Toes' பாடலுக்கும், இரண்டாவதாக 'Gomi Gomi' ஆகிய பாடல்களின் ரீமிக்ஸ் வெர்ஷனின் பாடல்களுக்கும் மிக அசத்தலாக நடனமாடி உள்ளார் பி.வி. சிந்து. மிகவும் ஸ்டைலாக உடை மற்றும் சன் க்ளாஸ் அணிந்த படி ஆடும் சிந்து, தனது கேப்ஷனில், "உங்களுக்கு எது உண்மையில் மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்யுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
பேட்மிண்டன் களத்தில் எப்போதும் வெற்றிக்காக போராடிக் கொண்டு படு தீவிரமாக ஆடும் பி.வி. சிந்து, தற்போது மிகவும் கூலாக நடனமாடி வருவதை பற்றியும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
