சிந்து 'அப்படி' சொன்ன உடனே எனக்கு 'அழுகையே' வந்திடுச்சு...! - வெள்ளிப்பதக்கம் வென்ற சீன தைபே வீராங்கனை நெகிழ்ச்சி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வீராங்கனை பி.வி சிந்து குறித்து சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங் பகிர்ந்துள்ள செய்தி நெகிழ வைத்துள்ளது.

ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து மற்றும் சீன தைபே வீராங்கனை தாய் ஜு யிங் மோதியதில் சீன தைபே வீராங்கனை வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இறுதிப் போட்டி சீன வீராங்கனை சென் யூஃபே மற்றும் சீன தைபே வீராங்கனை தாய் ஜு யிங்கிற்கும் நடைபெற்றது. இதில் சீன வீராங்கனை சென் யூஃபே 18-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் விளையாடி சீன தைபே வீராங்கனை தாய் ஜு யிங்கை வென்றார்.
இதனடிப்படையில், இந்தியாவிற்கு வெண்கல பதக்கமும், தாய் ஜு யிங் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் தனது போட்டி அனுபவம் குறித்து தாய் ஜு யிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபோது, இந்திய வீராங்கனை சிந்து குறித்தும் குறிப்பிடுள்ளார். அதில், 'என் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, நான் என்னளவில் என் ஆட்டம் குறித்த திருப்தியுடனே இருந்தேன். அப்போது சிந்து என்னை நோக்கி ஓடிவந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டார்.
என் முகத்தைப் பிடித்துக் கொண்டு உங்களுடைய ஆட்டம் நன்றாக இருந்தது. ஆனால், இன்றைய நாள் உங்களுடையது அல்ல என அவர் என்னை உற்சாகப்படுத்திய விதம் எனக்குக் கண்ணீரை வரவழைத்துவிட்டது' என்றார்.

மற்ற செய்திகள்
