பிரபல தமிழ் பாட்டுக்கு பிவி சிந்து 'செம' டான்ஸ்.. நடிகை ஹன்சிகா போட்ட கமெண்ட் .. தெறி வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவின் சிறந்த பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று, தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே, டிரெண்ட் ஆகும் பாடல்கள் அல்லது திரைப்படத்தில் வரும் ஹிட் வசனங்களை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடும் பழக்கம், மக்களிடையே அதிகரித்து வருகிறது.
அது மட்டுமில்லாமல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கூட தங்களின் சமூக வலைத்தளங்களில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரீல்ஸ் வீடியோக்கள்
அந்த வகையில், கடந்த சில மாதங்களில், புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்கள், மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆகியிருந்தது. தொடர்ந்து, கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடுவது, இணையவாசிகள் மத்தியில் புகழ் பெற்றிருந்தது. மேலும், 'பீஸ்ட்' படத்தின் அரபிக்குத்து பாடலும், நெட்டிசன்கள் மத்தியில் சக்கை போடு போட்டு வருகிறது.
பிவி சிந்துவின் நடனம்
இந்நிலையில், இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, சமீபத்தில் ஹிட்டான ஒரு தமிழ் பாடலுக்கு நடனமாடி, ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்காக இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பிவி சிந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
மயக்குறியே சிரிக்குறியே
சமீப காலமாகவே, அதிகம் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வரும் சிந்து, கச்சா பதாம் பாடலுக்காக ஆடியிருந்த வீடியோ, அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வகையில், முகேன் ராவ் மற்றும் ஆத்மிகா ஆகியோர் நடித்து தமிழில் வெளியான "மயக்குறியே சிரிக்குறியே" என்ற பாடலுக்கு, தற்போது நடனமாடியுள்ள பிவி சிந்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
ஹன்சிகா போட்ட கமெண்ட்
"Dance is the joy of movement" என பிவி சிந்து, கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள நிலையில், வீடியோவும் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. மேலும், நடிகை ஹன்சிகாவும், "Love it" என கமெண்ட் செய்துள்ளார்.
தமிழ் பாடலுக்கு இந்தியாவின் நட்சத்திரம் பிவி சிந்து நடனமாடியுள்ளது, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
