இந்தியாவிற்கு மட்டும்.. ஐசிசி எடுத்த திடீர் முடிவு.. அம்பானிக்கு அடித்த ஜாக்பாட்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை: ஐசிசி, கிரிக்கெட் ஒளிபரப்பு தொலைக்காட்சி உரிமையை இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வேறு வகையில் மாற்ற உள்ளது. அதாவது இந்தியாவிற்குத் தனியாகவும், இந்தியாவைத் தவிரப் பிற நாடுகளுக்கும் எனத் தனித்தனியாக ஒளிபரப்பு உரிமையை ஏலம் விட முடிவு செய்துள்ளது. இந்தியா அதிக வருமானத்தை தரும் நாடு என்பதால் இப்படியான முடிவினை எடுக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
விளையாட்டு தொலைக்காட்சி துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களம் இறங்க திட்டமிட்டு வரும் நிலையில் ஐசிசியின் இந்த முடிவு அந்நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
உலகளவில் இந்தியாவில் தான் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இதேபோல் இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஒளிபரப்பு வாயிலாகவே அதிக வருமானத்தை கிரிக்கெட் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் நிறுவனங்கள் பெறுகின்றன. குறிப்பாக இந்தியாவின் பங்கு தான் மிகப்பெரியது.
இந்த நிலையில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவிற்கு தனியாக ஏலம் விடுவது என ஐசிசி புதிய முடிவை எடுத்துள்ளது. ஐசிசியின் இந்த முடிவு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒளிபரப்பாளர்கள் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருவதால் கிரிக்கெட் போட்டிகளின் மீடியா ரைட்ஸ் பெறுவதில் கடும் போட்டியிருக்கும்.
தற்போது கிரிக்கெட் போட்டிகளின் மீடியா ரைட்ஸ் ஏலத்தில் ஸ்டார் இந்தியா மற்றும் சோனி பிக்சர்ஸ் மத்தியில் கடுமையான போட்டி உள்ளது. இந்த வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருகை பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். ஐசிசி-யின் புதிய முறை ஏலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தை முடித்த பின்பு நடக்க உள்ளது. இதேபோல் ஐசிசி ஏலத்தில் மீடியா ரைட்ஸ்-ஐ பெற விரும்புவோர் 4 அல்லது 8 வருடத்திற்கான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பம் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இந்திய கிரிட்கெட் போட்டிகளுக்கான மீடியா ரைட்ஸ்-ஐ பெறுவதற்காக ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் அல்லாமல் இந்த முறை அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2015-2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி மீடியா ரைட்ஸ்-ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சுமார் 2.02 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த ஏலத்தில் இந்தியாவிற்கான மீடியா ரைட்ஸ் மட்டும் 1.2 முதல் 1.8 பில்லியன் டாலர் வரையில் இருக்கலாம் என்கிறார்கள்.
ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என திட்டமிட்டு வரும் ரிலையன்ஸ்-க்கு இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கான ஏலத்தை தனியாக பிரித்த நிலையில் ரிலையன்ஸ் ஏலத்தில் வெற்றிப்பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்கிறார்கள்.