VIDEO: மேட்ச் வின் பண்ணதுக்கும்... 'சூப்பர்' ஓவர் போனதுக்கும் 'அவரு' மட்டும் தான் காரணம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற மும்பை-பெங்களூர் இடையிலான போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று பெங்களூர் அணி ஜெயித்தது. இதன் மூலம் அந்த அணி கடந்த தோல்வியில் இருந்து மீண்டு 2-வது வெற்றியை ருசித்துள்ளது.நேற்று பெங்களூர் அணி வீரர்கள் தங்களது முழு திறமையையும் காட்டினர்.
தமிழக வீரர் சுந்தர் 4 ஓவர்களையும் கச்சிதமாக வீச, சூப்பர் ஓவரில் நவ்தீப் சைனி சூப்பராக பந்து போட்டு பெங்களூர் வெற்றிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தார். இதேபோல பேட்டிங்கில் ஆரோன் பிஞ்ச், டிவிலியர்ஸ், படிக்கல், சிவம் துபே ஆகியோர் 200 ரன்களை தாண்டிட உதவி செய்தனர். மும்பை அணி தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் டி காக், ரோஹித் மற்றும் ஹர்திக் ஆகியோரின் அடித்த பந்துகளை சூப்பராக பிடித்து எல்லைக்கோட்டில் நின்ற பவன் நெகி அசத்தினார். ஆனால் 15 ரன்களில் இருந்த பொல்லார்டு கொடுத்த எளிதான கேட்சை நெகி கோட்டை விட்டுவிட்டார். இதையடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்டு பெங்களூர் அணிக்கு மரண பயத்தை காட்டி மேட்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்பார்த்த ரசிகர்கள் மும்பை அணி தோல்வி அடைந்ததுக்கு பவனின் 3 கேட்சுகள் தான் காரணம் அதே நேரம் சூப்பர் ஓவர் வரை மேட்ச் சென்றதுக்கும் அவர் மட்டுமே காரணம் என கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவேளை பவன் அந்த கேட்சை மிஸ் செய்யாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக மும்பை அணி தோல்வியை சந்தித்து இருக்கும். மேட்ச் சூப்பர் ஓவர் வரை சென்றிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
#IPL2020 #MIvRCB : #RCBvMI 10th Match : Pollard bludgeons 27 in 1 Zampa over pic.twitter.com/XZuypKbYZT
— IPL 2020 HIGHLIGHT (@ipl2020highlite) September 28, 2020
Exactly #RCBvMI #IPL2020 pic.twitter.com/RQYVIqj3YP
— தமிழ்நாட்டுக்காரன் ⷶ ᷯ ͥ ͭ ͪ ͥ ᷤ ͫ🕴️ (@salethuppaiyan) September 28, 2020
#Negi மாம்ஸ் - மொத்தம் 4 Catches. 3 Perfect ah பண்ணிட்டேன்.But One Miss.எல்லாரும் அதையே நோண்டுனாங்க.#RCBvMI #ABDevilliers #Kholi pic.twitter.com/HriGbdgw80
— Siva.Sabarigirinathan___ (@Ajith_giri) September 28, 2020