"எனக்கு 'பெண்' குழந்தை பொறந்துருக்கா..." 'மகிழ்ச்சி'யில் திக்குமுக்காடிப் போன கிரிக்கெட் 'வீரர்'... குவியும் 'வாழ்த்துக்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் சாரா தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக, கேன் வில்லியம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த குழந்தையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், 'ஒரு அழகான பெண் குழந்தையை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்' என்றொரு கருத்தும் பதிவிட்டிருந்தார்.
வில்லியம்சனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர் பதிவிட்ட சில மணித்துளிகளிலேயே கோலி, வார்னர், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், மெக்கல்லம் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் ரசிகர் பட்டாளம் அதிகம். அதில் ஒருவர் தான் வில்லியம்சன். போட்டியின் போது வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் மிகவும் அமைதியாக குட்டி சிரிப்பு ஒன்றுடன் கடந்து செல்பவர். வில்லியம்சனுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.