‘இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா..!’ கோப்பையை தவறவிட்ட இந்தியா.. போட்டி முடிந்ததும் ‘கோலி’ சொன்ன காரணம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீரர்கள் தேர்வு குறித்து பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்ற சவுத்தாம்ப்டன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நியூஸிலாந்து அணி 5 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கியது. ஆனால் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது தவறு என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய கேப்டன் விராட் கோலி, ‘இந்திய அணி இந்த இறுதிப்போட்டியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தது சரியான ஒன்றுதான். ஆனால் மழை காரணமாக போட்டி அடிக்கடி தடைப்பட்டது. அதனால் எங்களால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மழையால் போட்டி தடைபடாமல் தொடர்ந்து நடந்திருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் நிறைய ஓவர்கள் வீசி அதிகமாக விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். ஆனால் இந்த இறுதிப்போட்டியில் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அதனால் அவர்களை விமர்சிக்க வேண்டாம்’ என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கோலி, ‘தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை செய்வோம். நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக டெஸ்ட் அணியில் தேவையான மாற்றத்தை கொண்டு வருவோம். ஒருநாள் மற்றும் டி20 அணியில் பேட்டிங் வரிசை கடைசி வரை இருப்பதுபோல், டெஸ்ட் அணியிலும் கொண்டு வர உள்ளோம்.
மேலும் எந்தவித அச்சமும் இல்லாமல் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க முடியாது. ஒரே பகுதியில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என்று அவர்களை கட்டுப்படுத்தவும் முடியாது’ என கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
