எத்தனை வருஷ கனவு...! முதல்முறையாக 'சூப்பர்-12' சுற்றுக்கு தகுதி...! - வரலாற்று 'சாதனை' படைத்த அணி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலககோப்பை டி-20 தொடரின் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர்-12 சுற்று போட்டி நடைபெறவுள்ளது.

டி-20 உலகக்கோப்பை அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் அத்தொடரின் முதல் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. அதன் பின் நாளை முதல் சூப்பர்-12 சுற்று போட்டிகள் தொடங்க உள்ளது.
தற்போது நடைபெறவுள்ள சூப்பர்-12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் தகுதிபெற்றுவிட்டன. சூப்பர்-12 சுற்றுக்கான கடைசி அணியை தீர்மானிக்கும் லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடந்தது.
அப்போட்டியின் குரூப்-ஏ பிரிவில் உள்ள அயர்லாந்து மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் இன்று மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களான பால் ஸ்டர்லிங், கெபின் ஓ பிரையன், கேப்டன் ஆண்டி பார்பிர்னி ஆகியோர் தலா 38 ரன்கள், 25 ரன்கள், 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசியாக நமீபியா 126 என்ற சுலபமான ரன் நமீபியா அணிக்கு இலக்காக வைக்கப்பட்டது. நமீபியா அணியின் துவக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 15 ரன்னிலும், ஜேன் க்ரீன் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
முதலில் ரசிகர்களுக்கு பயத்தை காட்டினாலும் அதன்பின் களமிறங்கிய எராஸ்மஸ், டேவிட் வீஸ் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்தனர்.
எராஸ்மஸ் 53 ரன்களும் (நாட் அவுட்), டேவிட் வீஸ் 28 ரன்களும் (நாட் அவுட்) எடுத்தனர். கடைசியாக 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நமீபியா அணி 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நமீபியா அணி, முதல் முறையாக டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது என ரசிகர்கள் ஆரவரம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
