“இத்தனை கோடி கொடுத்து எடுத்ததுக்கு செம வொர்த்”.. இளம் வீரரை தாறுமாறாக பாராட்டிய சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணியின் இளம் வீரர் ராகுல் திவாட்டியாவை வீரேந்திர் சேவாக் புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.
இதில் அதிக பட்சமாக இளம் வீரர் அபிஷேக் சர்மா 65 ரன்களும், ஐடன் மார்க்ரம் 56 ரன்களும், ஷஷாங்க் சிங் 25 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியைப் பொறுத்தவரை முகமது சமி 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 196 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர்.
ஆனால் அப்போது பவுலிங் செய்த ஹைதராபாத் இளம் பவுலர் உம்ரான் மாலிக் தனது அசுர வேகப்பந்துகளால் சுப்மன் கில் (22 ரன்கள்), கேப்டன் ஹர்திக் பாண்டியா (10 ரன்கள்), சஹா (68 ரன்கள்), டேவிட் மில்லர் (17 ரன்கள்), அபினவ் மனோகர் டக் அவுட் என முக்கிய குஜராத் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்தார்.
அதனால் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய இளம் வீரர் ராகுல் திவாட்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் ரஷித் கான் கைகொடுத்தார். அதனால் கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 1, 6, 0, 6, 6 என முதலில் திவாட்டியா சிக்ஸர் பறக்கவிட, கடைசி 3 பந்துகளில் 3 சிக்ஸர்களை ரஷித் கான் விளாசினார். அதனால் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ராகுல் திவாட்டியா விளையாடினார். அப்போது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் இதேபோல் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதேபோல் பந்துவீச்சில் ஒருசில விக்கெட்டுக்களை எடுத்து அசத்தினார். இதன் காரணமாக சமீபத்தில் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அவரை 9 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு குஜராத் அணி வாங்கியது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், ராகுல் திவாட்டியாவை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘டேவிட் மில்லர் அவுட்டான பின் திவாட்டியாவுக்கு மிகப்பெரிய பாரம் ஏற்பட்டது. அதை குறைக்கும் வகையில் ரஷித் கான் முக்கிய பங்காற்றினார். ரஷீத் கான் முன்கூட்டியே களமிறங்கியிருந்தாலும் கூட அவரால் சாத்தியமில்லாத நிறைய ரன்களை அடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற சிறப்பான செயல்பாடுகளால் திவாட்டியா, தான் அதிக விலைக்கு தகுதியானவன் என்று நிரூபித்துள்ளார்’ என சேவாக் பாராட்டியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/