யாருங்க இந்த பையன்?.. தனி ஒருவனாய் GT அணியை மரண காட்டு காட்டிய SRH பவுலர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களும், ஐடன் மார்க்ராம் 56 ரன்களும் எடுத்தனர். அதேபோல் 7-வது வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் ஷஷாங்க் சிங் 6 பந்துகளில் 25 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அசத்தினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விருத்திமான் சாஹா 68 ரன்களும் ராகுல் திவாட்டியா 40 ரன்களும், ரஷித் கான் 31 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் உம்ரான் மாலிக்கும் இடம்பிடித்துள்ளார். நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் ஹைதராபாத் அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். நீண்ட நேரமாக விக்கெட்டுகள் எதுவும் விழவில்லை.
அப்போது பவுலிங் வீசிய உம்ரான் மாலிக், குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா, சுப்மன் கில், கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர் என முக்கிய விக்கெட்டுகள் அனைத்தையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். அதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு விக்கெட் ஒரே வீரர் உம்ரான் மாலிக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/