MESSI: தூங்கும் போது கூட உலகக் கோப்பையை கட்டிப்பிடிச்சு தான் தூங்குறாரு 😅 .. வைரலாகும் மெஸ்ஸியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது.

Also Read | அப்போவே அப்படி... சிறு வயதில் மெஸ்ஸி கொடுத்த வைரல் பேட்டி.. தீயாய் பரவும் வீடியோ!!
நேற்றைய முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டி உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகி சாதனை படைத்திருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் 81 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின்
எம்பாப்பே அடித்த முதல் கோல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த கோலை எம்பாப்பே அடித்து அர்ஜென்டினா ரசிகர்களை உறைய வைத்தார்.
இதனால் 2-2 என போட்டி சமன் ஆனது. பின்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் இரு அணிகளுமே மீண்டும் ஒவ்வொரு கோல் அடிக்க 3-3 என மீண்டும் போட்டி சமன் ஆனது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றது.
அர்ஜென்டினா உலக கோப்பை வென்ற பிறகு மெஸ்ஸி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மைதானத்தில் வலம் வந்தார். மேலும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் உலக கோப்பையையும் தங்க பந்து & பதக்கத்தையும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அளித்தார். இந்த தருணங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
கால்பந்து உலகின் நம்பர் 1 வீரர் என அறியப்படும் லியோனல் மெஸ்ஸி, நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்ததுடன் இறுதி போட்டியிலும் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பை சேர்த்து 4 கோல்கள் அடித்திருந்தார்.
பல சாதனைகளை மெஸ்ஸி படைத்திருந்தாலும் உலக கோப்பை என்ற கனவு மட்டும் அப்படியே மீதமிருந்தது. அதனை தனது கடைசி உலக கோப்பை தொடரில் நிறைவேற்றி சாதித்து காட்டி உள்ளார்.
இந்நிலையில் இன்று தனது அறையில் இருந்து மெஸ்ஸி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன. உலகக் கோப்பையை கட்டிப்பிடித்து தூங்குவது, உலக கோப்பை உடனே படுத்திருப்பது, ஆகாரம் அருந்துவது போன்ற புகைப்படங்களாக இவை அமைந்துள்ளன.
Also Read | கையில் கோல்டன் பூட்.. பக்கத்துல உலக கோப்பை.. இரண்டே வார்த்தையில் எம்பாப்பே Viral ட்வீட்..

மற்ற செய்திகள்
