ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. KKR VS LSG மேட்சில் நடந்த வேறலெவல் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 66-வது லீக் போட்டி இன்று (18.05.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் டி காக் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக டி காக் சிக்சர், பவுண்டரி என விளாசித் தள்ளினார். இந்த கூட்டணியை பிரிக்க கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எவ்வளோ முயன்றனர். ஆனால் கடைசி வரை இவர்கள் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை.
அதனால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் லக்னோ அணி குவித்தது. இதில் டி காக் 140 ரன்களும் (10 பவுண்டரி, 10 சிக்சர்கள்), கே.எல்.ராகுல் 68 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்கள்) விளாசினர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஆட்டக்காரர்கள் கூட்டணி இதுதான் என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர்.
அதேபோல் விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்கள் விளையாடிய முதல் அணி என்ற சாதனையையும் லக்னோ அணி படைத்துள்ளது. ஆனால் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி பட்டியலில் பெங்களூரு அணியின் விராட் கோலி-ஏபி டிவில்லியர்ஸ் கூட்டணி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 229 ரன்களுக்கு இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8