லட்டு மாதிரி கெடச்ச வாய்ப்பு.. ‘KKR பண்ண பெரிய தப்பு’.. கடைசி நேர பரபரப்பில் பறிபோன வெற்றி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி செய்த பெரிய தவறால் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டனர்.

ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணொ எடுத்தது.
இதனை அடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் டு பிளசிஸ் 5 ரன்னிலும், அனுஜ் ராவத் டக் அவுட்டாகும் ஆகினர். அடுத்து வந்த விராட் கோலி 12 ரன்களிலும், டேவிட் வில்லி 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் மற்றும் ஷாபாஸ் அகமது கூட்டணி அமைத்து ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தினர்.
இந்த சூழலி டிம் சவுத்தி வீசிய ஓவரில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 28 ரன்களிலும், வருண் சக்கரவர்த்தி வீசிய ஓவரில் ஷாபாஸ் அகமது 27 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷல் படேல் ஜோடி சேர்ந்தனர். கடைசி 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் பெங்களூரு அணி இருந்தது.
அப்போது வெங்கடேஷ் ஐயர் வீசிய 19-வது ஓவரில் ரன் எடுக்க ஓடும் போது தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷல் படேல் ஒரே பக்கம் சென்றனர். அப்போது அவர்களை ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் உமேஷ் யாதவ் சரியாக பந்தை வீசாததால் ரன் அவுட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் தப்பினார். இதனை அடுத்து 20 ஓவரில் தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாசி பெங்களூரு அணியை தினேஷ் கார்த்திக் வெற்றி பெற வைத்தார். ஒருவேளை தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட் செய்திருந்தால் கொல்கத்தா வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
