பரபரக்கும் ஐபிஎல் 'ஏலம்'... 'ஜாம்பவான்களுக்கு மத்தியில்... யாருங்க அந்த குட்டிப்பொண்ணு??? - கேள்விகளால் துளைத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Feb 18, 2021 08:57 PM

சென்னையில் தற்போது ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து அணிகளும் பல முன்னணி வீரர்களை எடுக்க போட்டி போட்டு வருகிறது.

jahnavi mehta is now youngest bidder of ipl once again

ஐபிஎல் அணிகளுள் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஷகிப் அல் ஹசன், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனிடையே, கொல்கத்தா அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கொல்கத்தா அணி சார்பில் கலந்து கொண்டார். அதே போல, கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரான பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவின் மகள் ஜானவி மெஹ்தாவும் பங்கு கொண்டுள்ளார்.

இதற்கு முன் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ஒன்றிரண்டு முறை ஜானவி மெஹ்தா கலந்து கொண்ட நிலையில், ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே கலந்து கொண்ட இளம் ஏலதாரர் என்ற பெருமையை படைத்திருந்தார். இந்த சீசனுக்கான ஏலத்திலும் அவர் பங்கெடுத்த நிலையில், மீண்டும் ஒருமுறை ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட இளம் ஏலதாரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

 

இது தொடர்பான தகவலை கொல்கத்தா அணி தங்களது ட்விட்டர் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது. ஜானவி மெஹ்தாவுக்கு தற்போது 20 வயது தான் ஆகிறது. மேலும், தனது மகள் ஜானவி மற்றும் ஷாருக்கான் மகன் ஆர்யன் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படத்தை, நடிகை ஜூஹி சாவ்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jahnavi mehta is now youngest bidder of ipl once again | Sports News.