‘RCB-யில் கோலினா’.. ‘CSK-வில் இந்த காளி!’.. ‘அசுர விக்கெட்டுகளை’ சாய்த்து, ‘பாராட்டுகளை’ குவித்த ‘இளம் வீரர்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுபாயில் நடைபெறும் ஐபிஎல் 13-ஆம் சீசன் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
இந்த ஆட்டத்தில் கோலி மற்றும் சாம் கரண் இருவரும் அவரவர் அணியின் சிறந்த வீரர்களாக கவுரவிக்கப்படுகின்றனர்.
At the end of the 1st innings of #RCBvCSK, Bangalore have registered a score of 145.
Virat Kohli & Sam Curran have been the stand out players for their respective franchises. #IPL2020 pic.twitter.com/k0br0IgEKo
— 100MB (@100MasterBlastr) October 25, 2020
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடியது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கோலி 50 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை பெங்களூர் அணி எடுத்தது.
சென்னை அணியை பொருத்தவரை ஃபீல்டிங்கில் மிகவும் தீப்பொறியுடன் ஆடி, ரன்ரேட்டை கட்டுப்படுத்தியுள்ளது என சொல்லலாம். குறிப்பாக சென்னை அணியின் இளம் வீரர் சாம் கரண் 3 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.