‘எதிர்பார்த்த மாதிரியே நடந்திருச்சு’.. கேதர் ஜாதவிற்கு பதில் அணியில் இடம்பிடித்த ‘தமிழக’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ப்ளேயிங் லெவனில் அதிரடி மாற்றத்தை செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி இன்று (10.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. வெற்றி பெற வேண்டிய போட்டியில் சென்னை அணி தோல்வி பெற்றுவிட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சென்னை அணி வீரர் கேதர் ஜாதவின் மோசமான ஆட்டமும் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இதனால் அடுத்த போட்டியில் ஜாதவிக்கு வாய்ப்பு அளிக்கப்படக்கூடாது என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
Super debut for Namma Jagadeesan is the highlight of the Namma XI for tonight! #WhistlePodu #WhistleFromHome #Yellove #CSKvRCB pic.twitter.com/MgMDU0atrv
— Chennai Super Kings (@ChennaiIPL) October 10, 2020
இந்த நிலையில் இன்றைய போட்டியில் கேதர் ஜாதவிற்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் இடம்பெற்றுள்ளார். சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக வீரர் ஜெகதீசன் அணியில் இடம்பெற்றுள்ளது சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
